மேற்கு வங்காளத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் மரணம்

மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பதர்பிரதிமாவில் உள்ள ஒரு சட்டவிரோத பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரிய வெடிவிபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர்வாசி சந்திரநாத் பானிக் என்பவரின் வீட்டில் உள்ள ஒரு சட்டவிரோத பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
மூன்று குழந்தைகள் உட்பட ஆறு கருகிய உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. முழுமையான மீட்பு நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படாததால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 3 times, 1 visits today)