மத்திய பிலிப்பைன்ஸை தாக்கிய 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
மத்திய பிலிப்பைன்ஸின் கடற்கரையில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நில அதிர்வு அலுவலகம், கடலில் சிறிதளவு மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்ததுடன், லெய்ட், செபு மற்றும் பிலிரான் ஆகிய மத்திய தீவுகளில் வசிப்பவர்கள் கடற்கரையிலிருந்து விலகி இருக்கவும், கடற்கரைக்குச் செல்ல வேண்டாம்” என்றும் வலியுறுத்தியுள்ளது.
சுமார் 33,000 மக்கள் வசிக்கும் போஹோல் மாகாணத்தில் உள்ள ஒரு நகராட்சியான காலேப்பிலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 11 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் பதிவாகியுள்ளது.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், “இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.
(Visited 3 times, 1 visits today)





