செய்தி தமிழ்நாடு

6.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் கூடுவாஞ்சேரி ஏரியில் ஆட்சியர் உத்தரவை மீறி தண்ணீர் திறப்பு

6.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் கூடுவாஞ்சேரி ஏரியில் ஆட்சியர் உத்தரவை  மீறி  தண்ணீர் திறப்பு….

மாவட்ட ஆட்சியருக்ககே விபூதி அடிக்க பார்த்த ஒப்பந்ததாரர்…

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நீர் வளத்துறையின் பராமரிப்பில் உள்ள கூடுவாஞ்சேரி ஏரிக்கு வல்லாஞ்சேரி , காட்டூர் தைலாபுரம் ஆகிய ஏரிகளின் உபரி நீர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொழியும் மழை நீர் வர ஆதாரமாக உள்ளது

இந்த ஏரியின் உபரி நீர் கால்வாய் தான் அடையாற்றின் ஆரம்பமாக உள்ளது.

இந்த ஏரியின் ஆயக்கட்டு பகுதிகள் சென்னை புறநகர் பகுதியை ஒட்டி உள்ளதால் 80 சதவீத ஆயக்கட்டு பகுதிகள் குடியிருப்புகள் வணிக வளாகங்கள் மற்றும் வீட்டு மனை பிரிவுகளாக மாற்றம் செய்யப்பட்டதால் மீதமுள்ள 20 சதவீதம் ஆயக்கட்டு பகுதிகள் மட்டுமே விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஏரியின் கரை 1572 மீட்டர் நீளமும் இதனுடைய கொள்ளளவு 8.82.மி.கன அடி கொண்ட  சுமார் 6.60 கோடி மதிப்பீட்டில் ஏரியின் கொள்ளளவை உயர்த்தி புனரமைக்கும் பணிகள் மார்ச் மாதம் 15 ஆம் தேதி துவங்கியது. இதனை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

இந்த ஏரி  புனரமைக்கும் பணியில் திடீரென ஏரியில் இருந்து நீரை வெளியுற்றப்பட்டது. கோடை காலம் என்பதால்

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ஒருதுளி நீரைக்கூட வெளியேற்றக்

கூடாது என்ற விதியை மீறி  ஏரியில் இருந்து தண்ணீரை

திறந்துவிடப்பட்டது. அந்த வீடியோ காட்சிகள் வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரியை தொடர்பு கொண்டபோது ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றியது எங்களுக்கு தெரியாது என அலட்சியமாய்  கூறுகிறார்

ஒப்பந்த தாரரை கேட்டால் கழிவுநீர் கலப்பதை அகற்றுவதற்காக நீரை திறந்துவிட்டோம் என்று கூறியதோடு உடனடியாக திறந்துவிட்ட நீரை மூடிவிட்டோம் என கூறுகிறார்

முறையாக பணி நடைபெறும் பட்சத்தில் உடனடியாக செய்தியாளர்கள் படம் பிடிப்பதை கண்டதும் அவசர அவசரமாக பணியை  நிறுத்தவேண்டிய அவசியம் என்ன?

என்ற கேள்வியெ ழுப்பிய அப்பகுதி விவசாயிகள் ஆகாய தாமரையை அகற்றி ஏரியின் கரையை மேம்படுத்துவதற்காக

டென்டர் விடப்பட்டு ஏரிமண்ணை கொள்ளையடிப்

பதற்கன ஆரம்ப பணிதான்  ஏரிநீரை வெளியேற்றியது என வெட்ட வெளிச்சமாக அம்பலம் ஆக்கி உள்ளது

இந்த ஏரி  விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகளின் நீராதாரமாகும். இந்த ஏரியில் தற்போது நிறைய வெளிநாட்டு பறைவைகளின் வரத்து அதிகரித்து வேடந்தாங்கல் போல காட்சியளிக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில்

டெண்டருக்காக ஒதுக்கப்பட்ட ரூபாய் 6.60 கோடியை முறையாக செலவிட்டு ஏரிநீரை வெளியேற்றாமல் ஆகாய தாமரையை மீண்டும் சூழாதவகையில் அறவே அகற்றி நாலாபுறமும் கரையை மேம்படுத்தி தரமான பணியை செய்திட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது..

ஏரி தண்ணீர் திடீரென திறந்து விடப்படும் நிகழ்வு கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவருக்கும் விழாவினை துவக்கி வைத்த அமைச்சர் தாமு அன்பரசன் அவர்களும் உடந்தையா என பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுகின்றன

 

(Visited 4 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி