மெக்சிகோவில் ஜனாதிபதியின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது பதிவான 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
தெற்கு மெக்சிகோவின்(Mexico) பசிபிக்(Pacific) கடற்கரைக்கு அருகில் குரேரோ(Guerrero) மாநிலத்தில் 35 கிமீ ஆழத்தில் 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க(America) புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் பதிவாகும் போது ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின்(Claudia Sheinbaum) தினசரி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று கொண்டிருந்தது.
இதில் ஜனாதிபதி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென நிலநடுக்க எச்சரிக்கை ஓசை எழுப்பப்பட்டதால் சந்திப்பு இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில், குரேரோவில் காயங்கள் அல்லது கடுமையான சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்று ஜனாதிபதி ஷீன்பாம் மற்றும் மாநில ஆளுநர் தெரிவித்தனர்.





