திமோர் தீவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
 
																																		இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று (31.08) சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமோர் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள கிழக்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள குபாங்கில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 9 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
