மேற்கு துருக்கியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

மேற்கு துருக்கியில் உள்ள சிந்தீர்கியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக துருக்கிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்தான்புல் மற்றும் சுற்றுலா தலமான இஸ்மிர் உட்பட நாட்டின் மேற்கில் உள்ள பல நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
நகர மையத்தில் உள்ள மூன்று மாடி கட்டிடம் உட்பட நிலநடுக்கத்தின் மையப்பகுதியான சிந்தீர்கியில் சுமார் 10 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று மேயர் செர்கான் சாக் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த மூன்று மாடி கட்டிடத்தில் ஆறு பேர் வசித்து வந்தனர். இடிபாடுகளில் இருந்து நான்கு பேர் மீட்கப்பட்டனர், மற்ற இரண்டு போரையும் மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாக மேயர் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)