துருக்கியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
துருக்கியின் மேற்கு பாலிகேசிர்(Balikesir) மாகாணத்தின் சிண்டிர்கி(Sindirki) மாவட்டத்தில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை ஆணையம் (AFAD) தெரிவித்துள்ளது.
இஸ்தான்புல்(Istanbul) மற்றும் அருகிலுள்ள மாகாணங்களான புர்சா(Bursa), மனிசா(Manisa), இஸ்மிர்(Izmir) ஆகிய இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஹபர்துர்க்(Haberturk) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் சிண்டிர்கியில்(Sindirki) 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதில் ஒருவர் உயிரிழந்தார்.
2023ம் ஆண்டு , துருக்கியில் 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 53,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரை நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவு இதுவாகும்.





