இலங்கை

ஏழு வருடங்களில் 587 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளன!

கடந்த ஏழு வருடங்களில் 587 மருந்துகள் பாவனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சமர் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தரமற்ற மருந்து பாவனை குறித்த சர்ச்சை நீடித்து வருகின்ற நிலையில், இன்று (24.07) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,  உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளும்,  பதிவு செய்யப்பட்ட இறக்குமதி செய்யும் மருந்துகளும் தரமற்றவை என பரிசோதனையில் தெரியவந்தால் அவை அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியக் கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 278 வகையான மருந்துகளில் ஒரு மருந்து மாத்திரமே தரமற்றது எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை செய்வதன் மூலம் இதுபோன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லும் போது முறையான களஞ்சிய வசதி இல்லாத நிலையில் மருந்து தரமற்றதாக மாறும் நிலை ஏற்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்