பௌத்தத்துக்கு எதிரான 550 அடிப்படைவாத குழுக்கள் இயக்கம்
உலகில் பௌத்த நாடுகளாக இருந்த பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மலேசியா மாலத்தீவு பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பௌத்த மதம் அழிக்கப்பட்டு இன்று இஸ்லாமிய நாடுகள் ஆகியுள்ளன அந்த வழியில் தப்பிப்பிழைத்துள்ள ஒரே நாடு எமது தாய்நாடு இலங்கையாகும் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கூறுகிறார்.
அதனால் தான் நாங்கள் விழிப்புடன் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகின்றோம் தொல்பொருள் புராதன சின்னங்களாக எமது புனித நிலங்கள் அபாகரிக்கப்படுவதை தடுப்பதற்காகவே பொதுநல சேனா ஆரம்பிக்கப்பட்டது.
அஹுங்கல்ல வெலிகந்த புராண விகாரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அநேகமான நாடுகளில் பெளத்த மதம் அழிக்கப்பட்ட போதிலும் 2500 ஆண்டுகளாக இந்நாட்டில் பௌத்த மதத்தைப் பாதுகாத்து வருபவர்கள் சிங்களவர்களே மேற்கு நாட்டவர்கள் எம்மை ஆக்கிரமித்து அடிமைகளாக ஆட்சி செய்த காலத்திலும் கூட பல அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து இக்காலத்திலும் கூட பெளத்த தர்மத்தைப் பாதுகாத்து வருகிறோம்.
அன்று நாங்களே விரும்பி நாங்கள் துறவரம் பூண்டோம் இப்போது தான் இந்த காவியுடையினுள் உள்ள கஷ்டத்தை அழுத்தத்தை உணர்கிறோம். இப்போது ஒன்றும் செய்ய முடியாது.
முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் தமது சமய கடமைகளை முறையாக நிறைவேற்றுகின்றனர் முஸ்லிம்கள் 5 வேளை தொழுகைக்காக பள்ளிவாசல் செல்கின்றனர் அதேபோன்று ஏனைய மதத்தவர்களும் தமது மதக்கடமைகளை சிறப்பாக செய்கின்றனர்.
ஆனால் பௌத்தர்களிடம் ஒற்றுமை இல்லை நம்மவர்கள் கொஞ்சம் தலை தூக்கும் போது பெட்டிஷன் அடித்து அவனை இல்லாமல் செய்கின்றனர்.
எங்கள் சமூகத்தில் 80 வீதமானவர்கள் மன நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை நினைக்கும் போது தான் கவலையாக இருக்கிறது.
எதிர்கால சந்ததிக்கு இந்த நாட்டை பாதுகாத்து அவர்களிடம் கையளிக்க வேண்டும் உரிமைகளுக்காக போராடியமையால் தான் என்னை சிறையில் அடைத்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.