ஈரானில் நாடு தழுவிய போராட்டத்தில் 538 பேர் உயிரிழப்பு
ஈரானில்(Iran) நாடு தழுவிய போராட்டங்கள் மீதான ஒடுக்குமுறையில் 538 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்று ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இரண்டு வார போராட்டங்களில் 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்காவை(America) தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் அட்டர்னி ஜெனரல் முகமது மொவஹெடி ஆசாத் (Mohammad Movahedi Azad) போராட்டங்களில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரியாக கருதப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் ஆரம்பத்தில் அறிவித்திருந்தார்.





