ஈரானில் இருந்து 5 லட்சம் ஆப்கானியர்கள் வெளியேற்றம் – இஸ்ரேலிடம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு

ஈரான் அரசு தனது நாட்டில் சட்டவிரோதமாக தங்கியுள்ள ஆப்கானியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 16 நாட்களில் மட்டும் 5,08,426 ஆப்கானியர்கள் தங்கள் சொந்த நாடான ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு தெரிவித்தது.
இது சமீபத்திய காலத்தில் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மிகப்பெரிய சம்பவங்களில் ஒன்றாக ஐ.நா. குறிப்பிட்டுள்ளது.
பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த இவர்கள், டெஹ்ரான், இஸ்பஹான் போன்ற ஈரானின் முக்கிய நகரங்களில் வாழ்ந்துள்ளனர்.
சிலர் இஸ்ரேலிடம் பணம் பெற்றுப் உளவு செய்ததாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாக இருப்பதாகக் கூறி, ஈரான் அரசு அவர்கள் அனைவரையும் வெளியேற்றத் தொடங்கியது.
இதனால், குடும்பத்துடன் வாழ்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் வீடுகளை இழந்து, தற்போது ஆப்கானிஸ்தானின் இஸ்லாம் காலா நகர முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.