எகிப்தின் முதல் ராணியின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட 5,000 ஆண்டுகள் பழமையான வைன் !
எகிப்தின் முதல் பெண் பாரோ (ராணி) என்று நம்பப்படும் பெண்ணின் கல்லறையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுவின் சீல் செய்யப்பட்ட ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டியானா கோஹ்லர் தலைமையிலான ஜெர்மன்-ஆஸ்திரியக் குழு, அபிடோஸில் உள்ள ராணி மெரெட்-நீத்தின் கல்லறையை அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது பெரிய பாட்டில்களில் வைன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில் “வைன் திரவமாக இல்லை, அது சிவப்பு அல்லது வெள்ளையா என்பதை எங்களால் சொல்ல முடியாது. அதனை நாங்கள் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம் அதன்பின் தான் விவரம் தெரிய வரும். ஒன்றும் மட்டும் உறுதி, இந்த வைன் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது மட்டும் கூற முடியும்’’ என தெரிவித்துள்ளனர்.
பாலைவன கல்லறை வளாகம் போல காட்சியளிக்கும் இந்த இடம் 41 அரண்மனைகள் மற்றும் ஊழியர்களின் கல்லறைகளை உள்ளடக்கியது. சுடப்படாத மண் செங்கற்கள், களிமண் மற்றும் மரத்தால் கட்டப்பட்டு உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்