நைஜீரியாவில் 5 ஆயிரம் அரியவகை எறும்புகள் கடத்தல் – 2 சிறுவர்கள் கைது

நைஜீரியா நாட்டில் உள்ள காடுகளில் பல்வேறு விதமான அரிய வகை பறவைகள், பூச்சி இனங்கள், மிருகங்கள் உள்ளன.
இந்த நிலையில் வனப்பகுதியில் வாழும் அரிய வகை பூச்சியினங்கள் தொடர்ந்து கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,
நைரோபியில் வெளிநாட்டினர் தங்கும் வணிக விடுதிகளில் போலீசாருடன் இணைந்து வனத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் குழாயில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரம் அரியவகை எறும்புகள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கைது செய்யப்பட்ட 19 வயதுடைய லோர்னாய் டேவிட் மற்றும் செப்பே லோட்விஜ்க்ஸ் ஆகிய இருவர் நைரோபியில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது தாங்கள் வேடிக்கைக்காக எறும்புகளை சேகரித்து வருவதாகவும், அது சட்டவிரோதமானது என்று தெரியவில்லை என்றும் அவர்கள் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தனர்.