500 கோடி ரூபா மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் கைது
500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் – கலென்பிந்துனுவௌ பகுதியைச் சேர்ந்த மக்களிடம் பிரமிட் வகை வரத்தகத்தின் ஊடாக இவ்வாறு மோசடியில் ஈடுப்பட்டுளளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் மூன்று வருடங்களாக தலைமறைவாகியிருந்த குறித்த சந்தேகநபர் கண்டி – பிலிமத்தலாவ பகுதியிலுள்ள விடுதியொன்றில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரவித்துள்ளது.
39 வயதுடைய குறித்த சந்தேக நபர் மோசடியாக பெற்ற பணத்தில் கலென்பிந்துனுவௌ, அனுராதபுரம், கடவத்தை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் காணி மற்றும் வீடுகளை கொள்வனவு செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஒரு பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றியவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.