இலங்கையில் மது அருந்துவதால் தினமும் 50 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் தினமும் 50 பேர் மது அருந்துவதால் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 3ஆம் திகதி சர்வதேச மதுசார தடுப்பு தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு இந்த தகவலை குறித்த நிலையம் வெளியிட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியன் இறப்புகள் மதுபானம் பருகுவதால் ஏற்படுவதுடன், பல நோய்கள் உள்ளிட்ட பல விபத்துக்கள் ஏற்படவும் இது காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையல், மதுசார வரி மூலம் கிடைக்கும் வருவாயைக் கணக்கிடுவதனால் மாத்திரம் அரசின் வருமானத்தை கணிக்க முடியாது என்றும் மதுசாரம் அருந்துவதால் அவர்களின் உடல் நலம், பொருளாதாரம் மற்றும் இதர செலவுகளுக்களையும் அறிவியல் பூர்வமாகக் கணக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 12 times, 1 visits today)