இலங்கை

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் மாயமான 50 கிலோ கஞ்சா

யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா மாயமாகி உள்ளது என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பகுதியில் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் 50 கிலோ கஞ்சா களவாடப்பட்டுள்ளது அல்லது மாயமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சான்று பொருளே இவ்வாறு காணாமல் போய் உள்ளது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிசார் மாற்றும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 17 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்