2023 ஆம் ஆண்டு இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் வருகை 50% அதிகரிப்பு
2023 ஆம் ஆண்டில், இத்தாலியில் தரையிறங்கிய புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிவிக்ப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறிய தகவலை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் 155,754 புலம்பெயர்ந்தோர் தரையிறங்கியுள்ளனர், இதில் 17,000 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற வெளிநாட்டு சிறார்களும் அடங்குவர், அதே நேரத்தில் 2022 ஆம் ஆண்டு 103,846 பேர் இருந்தனர்.
ஒகஸ்ட் மாதத்தில் தரையிறங்குவதற்கான உச்சத்தை எட்டியது, முழு மாதத்திலும் 25,673 புலம்பெயர்ந்தோர் வந்ததாக தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





