ஸ்ரீநகரில் கடும் பனிப்பொழிவால் 50 விமானங்கள் ரத்து
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர் பன்னாட்டு விமான நிலையத்தின் போக்குவரத்து இன்று முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை மற்றும் ஓடுபாதையில் பனி குவிந்துள்ளதால், இன்று இயக்கப்பட வேண்டிய 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதில் வருகை தர வேண்டிய 25 விமானங்களும், புறப்பட வேண்டிய 25 விமானங்களும் அடங்கும்.
இதனால், குடியரசு தின விடுமுறையைக் கொண்டாடச் சென்றிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வீடு திரும்ப முடியாமல் விமான நிலையத்திலேயே தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து மட்டுமின்றி, சாலைப் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜம்மு-காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
பயணிகள் தங்களது விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





