சீனாவில் கோவிட் தொற்றையடுத்து மீண்டும் பரவும் ஆபத்து – நோயாளிகளால் நிரம்பியுள்ள மருத்துவமனைகள்
கோவிட்-19 தொற்றுநோய் பரவி 5 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
HMPV என்ற அந்த வைரஸ் Flu காய்ச்சல் மற்றும் கோவிட் அறிகுறிகளுடன் பரவுவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இன்புளூவன்சா, HMPV போன்ற வைரஸ்களால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய வகை வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் அதன் பாதிப்பை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு சீனாவில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
நோயின் நிலை குறித்து சீன அதிகாரிகள் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.