இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!
தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்குரிய ஒப்பந்தம் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் இன்று கைச்சாத்திடப்பட்டது.
தொகுதிப் பங்கீடு இறுதிபடுத்தப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.வீரபாண்டியன்,
“கடந்த முறையைவிட இத்தேர்தலில் எங்களுக்கு கூடுதல் இடங்கள் வேண்டும் என்று திமுகவிடம் கோரினோம். ஆனால் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரியண்ணன் மனப்பாண்மையில் திமுக ஒருபோதும் நடந்தது இல்லை. தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் திமுக நிர்பந்திக்கவில்லை. கட்டளையிடவில்லை. அழுத்தம் தரவில்லை.
மாறாக கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகள் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ள கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதால் ஓரணியில் சேர்ந்துள்ளோம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.





