5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கம் சார்பில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களை பதிலாக புதிய வாகனம் வழங்க கோரியும், போட்டோ காலி பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்பிடக்கோரியும்,
ஓட்டுனர்களுக்கு புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்த கோரியும், ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கோரியும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கடந்த 8ஆம் தேதி முதல் வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கோரிக்கை அட்டையை அணிந்து பணி செய்து வருவதாகவும், வரும் 22ஆம் தேதி மாநில அளவில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெறுவதாக தெரிவித்தனர்.