ஜேர்மனில் அமைச்சரையே கடத்த திட்டமிட்ட 5 பேர்!
ஆட்சி கவிழ்ப்பு மற்றும் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரை கடத்த திட்டமிட்டதாக ஜேர்மனியில் ஐந்து பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இன்று அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்படுகிறார்கள்.
உள்நாட்டு யுத்தம் போன்றதொரு சூழலை உருவாக்கி, நாடு முழுவதும் குண்டு வெடிப்புகள் நடத்தி மின்சாரத்தை துண்டித்துவிட்டு, அதைத் தொடர்ந்து ஜேர்மனியின் சுகாதாரத்துரை அமைச்சரான Karl Lauterbachஐ கடத்த திட்டமிட்டதாக நான்கு ஆண்கள் மற்றும் ஒரு 75 வயது பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து ஏராளம், ஆயுதங்களும், பெருமளவில் பணம், தங்கம் மற்றும் வெள்ளியும் கைப்பற்றப்பட்டன.குற்றம் சாட்டப்பட்டவர்களில் யாருடைய பெயரும் வெளியிடப்படாத நிலையில், அந்த பெண்ணைக் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தப் பெண், ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியை ஆவார். அவர், இந்த கும்பலுக்கு பல ஆவணங்களைத் தயார் செய்து கொடுத்துள்ளார். அவற்றில், அமைச்சர் Karl Lauterbachஐ கைது செய்வதற்கான கைது வாரண்டும் அடக்கம்.மேலும், அந்தப் பெண், ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் போலந்து ஜனாதிபதி Andrzej Duda ஆகியோருக்கும் கடிதங்களை எழுதிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.