ஐரோப்பா

ரஷ்யாவில் சீசியம் தனிமம் வாங்க முயன்ற 5 பேர் கைது

உக்ரைனியர் ஒருவர் கேட்டுகொண்டதற்கிணங்க கதிரியக்க அபாயம் கொண்ட சீசியம் தனிமத்தை வாங்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஜப்போர்ஷியா அணுமின் நிலையத்தில், கதிர்வீச்சு ஏற்படும் அளவிற்கு தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுவருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதே சமயம், அணுமின் நிலையம் மீது தாக்குதல் நிகழ்த்த உக்ரைன் திட்டமிட்டுவருவதாக ரஷ்யாவும் பதிலுக்கு குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில் உக்ரைனியர் ஒருவருக்காக கள்ளச்சந்தையில் ஒரு கிலோ சீசியமை 29கோடி ரூபாய்க்கு வாங்க முயன்ற 5 பேரை கைது செய்து விசாரணை நடத்திவருவதாக ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது.

(Visited 8 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!