குஜராத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 5 பேர் பலி
குஜராத்தின் டாங் மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஐந்து பேர் உயிரிழந்தனர் மற்றும் 17 பேர் படுகாயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
சபுதாரா மலைவாசஸ்தலத்திற்கு அருகே பேருந்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜி. பாட்டீல் தெரிவித்தார்.
48 யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, விபத்துத் தடுப்புச் சுவரை உடைத்து சுமார் 35 அடி ஆழத்தில் பள்ளத்தாக்கில் விழுந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் என ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
“ஐந்து யாத்ரீகர்கள் இறந்தனர், மேலும் 17 பேர் பலத்த காயமடைந்தனர், அவர்கள் அஹ்வாவில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்னும் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மீட்புப் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது” என்று அந்த அதிகாரி குறிப்பிட்டார்.