இந்தியாவில் பரோட்டா உட்கொண்டதால் உயிரிழந்த 5 மாடுகள் – ஆபத்தான நிலையில் 9 மாடுகள்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் 5 மாடுகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாடுகள் அளவுக்கு அதிகமான பரோட்டாவும் பலாப்பழமும் உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
9 மாடுகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மாடுகள் ஒரே பண்ணையைச் சேர்ந்தவையாகும்.
கடந்த சனிக்கிழமை மாடுகளின் உடல்நலம் குன்றியதாக தெரியவந்துள்ளது.
கால்நடைத் தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதால் பண்ணையின் உரிமையாளர் ஹஸ்புல்லா மாடுகளுக்குப் பரோட்டா, பலாப்பழம், புளியங்கொட்டை ஆகியவற்றைக் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
அதனால் மாடுகளின் உடலில் நீர்ச்சத்துக் குறைந்து அவை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சர் பாதிக்கப்பட்ட பண்ணையை நேரில் சென்று பார்வையிட்டார்.
பண்ணை உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் கூறினார். ஹஸ்புல்லா சுமார் 20 ஆண்டுகளாக மாட்டுப் பண்ணை நடத்துகிறார்.