தைவானில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு : மிகப் பெரிய ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை!
தைவானில் இன்று (30.01) காலை 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குழுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய வானிலை நிறுவனம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தின்படி, சியாய் மாவட்டத்தின் டாபு டவுன்ஷிப்பில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அதைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே டாபுவில் குறைந்தது ஒரு டஜன் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ உடனடியாக அறிவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள், எதிர்காலத்தில் பெரிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான முன்னெச்சரிக்கையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் எதிர்வுக்கூறியுள்ளனர்.
(Visited 12 times, 1 visits today)





