செய்தி தமிழ்நாடு

5 ஏக்கர் தைல மர தோட்டத்தில் திடீர் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா தச்சங்குறிச்சி சவேரியார்பட்டியில் சைவராஜ் சாரதா அந்தோனிசாமி செல்வம் என்ற நால்வருக்கு சொந்தமான 5 ஏக்கர் தைலமரத் தோட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தீ மள மளவென பற்றி எரியத் தொடங்கின.

தைல மரத் தோட்டத்தின் வழியாக சென்ற அப்பகுதியை சேர்ந்த அருள்ரோஜ்மேரி இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் தகவலறிந்து சம்ப இடத்திற்கு விரைந்து சென்ற சிவக்குமார் தலைமையிலான கந்தர்வகோட்டை தீயணைப்புத் துறையினர் இலை தலைகளை கொண்டும் தண்ணீரினை பீச்சி அடித்தும் 1 மணி நேரம் போராடி தீயினை அனைத்தனர்.

அதனை தொடர்ந்து தீயணைப்பு செல்லும் வழியில் தச்சங்குறிச்சி மெயின் சாலையில் தைலமரத்தோட்டத்தின் அருகே புல்வெளிகள் தீ பற்றி எறிவதைக்கண்ட தீயணைப்புத் துறையினர்.

இலை தழைகளை கொண்டு அடித்து தீயிணை அனைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

 

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி