பாகிஸ்தானில் ஆபத்தில் இருக்கும் 45 மில்லியன் குழந்தைகள் : பொய் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போராளிகள்!
போலியோ நோயிலிருந்து 45 மில்லியன் குழந்தைகளைப் பாதுகாக்க பாகிஸ்தான் நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
ஆனால் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட காவல்துறையினரை குறிவைத்து வன்முறை தாக்குதல்கள் இடம்பெறுவதும் வழமையான ஒன்றாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் தடுப்பூசி பிரச்சாரங்கள் குழந்தைகளை கருத்தடை செய்வதற்கான மேற்கத்திய சதி என்று போராளிகள் பொய்யாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
வீடு வீடாகச் செல்லும் பிரச்சாரத்தின் போது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு, அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஏ சப்ளிமெண்ட்ஸ் சொட்டுகள் வழங்கப்படும்.
பிரதம மந்திரி ஷேபாஸ் ஷெரீப் சமீபத்தில் முன்னணி சுகாதார ஊழியர்களை சந்தித்து, வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடாமல் குழந்தைகளை விட்டுவிடக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.