இலங்கை செய்தி

ஆறு மாதங்களில் 4,400 சிறுவர் துஷ்பிரயோகம்

நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் மொத்தமாக 4,380 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

அந்த அறிக்கையின் பிரகாரம் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில், ஆயிரத்து 332 வரையான சிறுவர்கள் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவையுடையவர்களாக இருப்பதாகவும், ஆயிரத்து 16 சிறுவர்கள் கொடுமைக்குள்ளாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும்,

787 சிறுவர்களுக்கு கட்டாயக் கல்வி பெற்றுக்கொடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. 290 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் 70 சிறுவர்கள் தொடர்பில் புறக்கணிப்பு அல்லது கொடுமைக்குள்ளாகுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காயம் ஏற்படுத்தியது தொடர்பில் 90 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மேலும், கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 157 முறைப்பாடுகளும், கடுமையான காயங்களை ஏற்படுத்துவது தொடர்பில் 119 முறைப்பாடுகளும் சிறுவர்களை யாசகத்துக்காக பயன்படுத்துவது தொடர்பில் 121 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!