இலங்கை செய்தி

தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட 43 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் ஒரு தொகுதியை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள போதைப்பொருளின் பெறுமதி சுமார் 43 மில்லியன் ரூபா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைப் பொருட்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 25 பொதிகளை ஆய்வு செய்த போது இந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொழும்பு, மஹரகம, பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, பாணந்துறை, மொரட்டுவை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களின் முகவரிகளுக்கு ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் இருந்து இந்த பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணையில் அவை போலியான முகவரிகள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் இந்த போதைப்பொருள் கையிருப்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை