குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவிப்பு
2022ஆம் ஆண்டு பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் வருகை தந்த இராணுவத் தளபதிகள் குழுவை மகிழ்விப்பதற்காக பெருமளவிலான பணம் செலவிடப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர்கள் பாடநெறியில் 25 வெளிநாட்டு இராணுவ வீரர்கள் மற்றும் 123 உள்ளூர் இராணுவ வீரர்கள் உட்பட 148 இராணுவ வீரர்கள் பங்கேற்றதாக பாதுகாப்பு அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த சந்தர்ப்பங்களில் கூட்டு தேநீர் விருந்து நடத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்ட இராணுவ மரபு என பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு கீழே உள்ளது.