சிங்கப்பூரில் ஆளில்லா அடுக்குமாடி வீட்டில் 43 பூனைகள் – நபருக்கு கிடைத்த தண்டனை
சிங்கப்பூரில் ஆளில்லா அடுக்குமாடி வீட்டில் 43 பூனைகளை உணவில்லாமல் தவிக்கவிட்ட நபருக்கு 20 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் செல்லப் பிராணிகள் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவமாக அது கருதப்படுவதாகத் தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவர் 31 வயது முகமது டேனியல் சுகிர்மான் என்பவராகும்.
செல்லப் பிராணிகளின் சொந்தக்காரர் என்ற முறையில் பூனைகளுக்குத் தேவையில்லாத வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியதாக அவர் மீது 10 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
அந்தச் சம்பவம் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.
வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வருவதாகக் கிடைத்த புகாரையடுத்து அந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பூட்டியிருந்த வீட்டில் இருந்து மாண்ட பூனைகளும் சில பூனைகளின் எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டன.