உணவு உதவி சலுகைகளை இழக்கும் 42 மில்லியன் அமெரிக்கர்கள்!
அமெரிக்காவின் கருவூலத்துறை நிதி பற்றாக்குறை பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.
ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையிலான வாத பிரதிவாதங்கள் செலவீன சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
இதன்காரணமாக பெரும்பாலான அரச ஊழியர்கள் சம்பளத்தை இழந்துள்ளனர். ஏறக்குறைய 4000 பேர் ஊதியத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் உச்சநீதிமன்றம் மறு அறிவிப்புவரை மூடப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் உணவு உதவி சலுகைகளை இழக்க நேரிடும் எனவும், சுகாதார மானியங்களும் காலாவதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிக்கல் நிலையை தீர்க்க இரு தரப்பினரும் எவ்வித பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கவில்லை. அமெரிக்கா அரசாங்கம் மீளவும் திறக்கப்படும்போது மட்டுமே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பேன் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இது இந்த அரச முடக்கம் மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டாட்சி உணவு உதவி பெறும் 42 மில்லியன் அமெரிக்கர்கள் உதவியை அணுக முடியாது என்று அஞ்சுகின்றமை குறிப்பிடத்தக்கது.





