தென்னாப்பிரிக்காவில் பாரம்பரிய சடங்கில் ஈடுபட்ட 41 இளைஞர்கள் உயிரிழப்பு!
தென்னாப்பிரிக்காவில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெறும் பாரம்பரிய சடங்குகளில் ஈடுபட்ட குறைந்தது 41 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராம்பரிய கலாச்சாரத்தின்படி, ஆண் விருத்த சேதனம் செய்யும் சடங்கில் கலந்துகொண்ட இளைஞர்களே மேற்படி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோர்கள் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரங்களைப் பின்பற்றத் தவறியமையால் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





