காஸாவில் 40,000 பேர் பலி – ஹமாஸ் சுகாதாரத் துறை
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இருந்து காஸாவில் 40,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளினால் இவர்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ள 40,005 பேர் காசா பகுதியில் வாழும் 2.3 மில்லியன் மக்களில் 1.7% பேர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், காசா பகுதியில் போர் தொடங்கியதில் இருந்து கிட்டத்தட்ட 60% கட்டிடங்கள் அழிந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும், காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள ரஃபா நகருக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
காசாவில் இறந்தவர்களில் பொதுமக்கள் மற்றும் போராளிகளின் எண்ணிக்கையை ஹமாஸ் சுகாதார அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.
எவ்வாறாயினும், உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் பெண்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என திணைக்களங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனிடையே, சண்டையில் இதுவரை 15,000 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி உலக சேவையிடம் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.