காசாவில் உள்ள 40 மாணவர்கள் இங்கிலாந்தில் கல்வி கற்க அனுமதி!

காசாவில் உள்ள சுமார் 40 மாணவர்கள் பிரித்தானியாவில் கல்வியை தொடர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
நிதியுதவி பெற்ற பல்கலைக்கழக உதவித்தொகைகளைப் பெறுவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மாணவர்கள் ஒரு வருட முதுகலைப் பட்டங்களைப் படிப்பதற்கான அரசாங்க நிதியுதவி முயற்சியான செவனிங் திட்டத்தின் கீழ் உதவித்தொகைகளைப் பெறுவதற்காக ஒன்பது பேருக்கு காசாவை விட்டு வெளியேற உதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்ற தனியார் திட்டங்கள் மூலம் உதவித்தொகைகளை முழுமையாக நிதியளித்த சுமார் 30 பேருக்கு உதவும் திட்டங்களுக்கும் உள்துறைச் செயலாளர் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)