ஐரோப்பா

ஐரோப்பாவை நோக்கிச் சென்ற படகு விபத்து – சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி

ஐரோப்பாவை அடைய விரும்பிய குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நேற்று கடலில் மூழ்கியதில், சிறு குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இந்தத் துயரச் சம்பவம் துனிசியாவை (Tunisia) அண்டிய மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான இந்தப் படகில் 70-க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது.

துனிசிய அதிகாரிகள் விரைந்து செயற்பட்டதன் காரணமாக 20 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஐரோப்பாவை நோக்கிப் பயணிக்கும் குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் ஆபத்தை இந்த விபத்து மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 5 times, 5 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்