சூடான் சந்தையில் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த உள்நாட்டுக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில், சூடானின் ஆம்டர்மேன் பகுதியில் உள்ள திறந்தவெளி மார்க்கெட் மீது துணை ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 54 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
(Visited 1 times, 1 visits today)