பிரித்தானியாவில் 4 வயது சிறுவன் குத்திக்கொலை: தாய் மீது குற்றச்சாட்டு

பிரித்தானியாவில் 4 வயது மகன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிறுவனின் தாய் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
4 வயது மகன் கோபி டூலி-மச்சாரியா கத்திக்குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 41 வயதான தாய் கெசியா மச்சாரியா தேம்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட உள்ளார்.
புதன்கிழமை இரவு 10.50 மணியளவில் ஹாக்னி மாண்டேக் சாலையில் உள்ள முகவரிக்கு அழைக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.
அப்போது சிறுவன் கோபி கத்தி குத்து காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டான்.
இதற்கிடையில் சிறப்பு உடற்கூறு பரிசோதனை வியாழக்கிழமை டிசம்பர் 28ம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)