கேரளாவில் லாரி மோதி 4 மாணவிகள் மரணம்

கேரளாவின் பாலக்காட்டில் வேகமாக வந்த டிரக் மோதியதில் 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பள்ளி நேரம் முடிந்து வீடு திரும்புவதற்காக சிறுமிகள் பஸ்சுக்காக காத்திருந்தபோது, கல்லடிக்கோடு அருகே உள்ள பனையம்படத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சீமெந்து ஏற்றிச் சென்ற பாரவூர்தி அதிவேகமாகச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவல்களில் பலியானவர்கள் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பைத் தூண்டியது, இந்த இடம் சாலை விபத்துகளுக்கு பெயர் போன இடம் என்றும், தங்கள் புகார்களை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
(Visited 36 times, 1 visits today)