அமெரிக்காவின் மிசிசிப்பியில் உள்ள பாடசாலை வளாகத்தில் 4 பேர் சுட்டுக்கொலை
மிசிசிப்பியின் டவுன்டவுன் லேலண்டில் உள்ள ஒரு பாடசாலை வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக டைலர் ஜரோட் குட்லோ என அடையாளம் காணப்பட்ட 18 வயது இளைஞரை தேடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் துறை தலைவர் அல்லது ஷெரிப் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு லேலண்ட் மேயர் ஜான் லீ வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களில் நான்கு பேர் விமானம் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.





