பெண் உட்பட 4 ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது: குஜராத் ஏடிஎஸ் அதிரடி
குஜராத்தில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்களான பெண் உட்பட 4 பேரை தீவிரவாத எதிர்ப்பு படை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச காவல்துறையின் தீவிரவாத எதிர்ப்பு படை (ஏடிஎஸ்) மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இணைந்து ஜபல்பூரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடைவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தியது.
அப்போது சையத் மமூர் அலி, முகமது அடில் கான் மற்றும் முகமது ஷாஹித் ஆகியோரை என்ஐஏ கைது செய்தது. அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நான்கு பேரை குஜராத் தீவிரவாத எதிர்ப்பு படை பொலிஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சுமேரா என்ற சூரத் பெண் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர். அவர்களுக்கு சொந்தமான இடத்தில் சோதனையின் போது, தடை செய்யப்பட்ட பொருட்கள் அவர்களிடம் இருந்தன. அவற்றை மீட்டுள்ளோம். இவர்கள் அனைவரும் கடந்த ஒரு வருடமாக ஒருவரோடு ஒருவர் தொடர்பில் இருந்ததோடு, வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று கூறினர்.