ஹமாஸ் அமைப்பால் அடுத்து விடுவிக்கப்படவுள்ள 4 பணயக்கைதிகள்
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அடுத்து விடுவிக்கப்பட உள்ள நான்கு பணயக்கைதிகளை ஹமாஸ் பெயரிட்டுள்ளது.
கரினா அரியேவ், டேனியல்லா கில்போவா, நாம லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகியோர் விடுவிக்கப்படவுள்ளனர்.
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 180 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இது இரண்டாவது விடுவிப்பாகும்.
முதல் பரிமாற்றத்தில் மூன்று பணயக்கைதிகள் மற்றும் 90 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
அடுத்த ஐந்து வாரங்களில் விடுவிக்கப்படவுள்ள மீதமுள்ள 26 பணயக்கைதிகள் பற்றிய தகவல்களையும் ஹமாஸ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





