ஸ்பெயினை உலுக்கிய தீ விபத்து – 4 பேர் பலி – 14 பேர் காயம்

ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தீ விபத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை உட்பட 14 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் 138 வீடுகள் உள்ளதாகவும், அதில் 450 பேர் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
தீ பரவ ஆரம்பித்த சிறிது நேரத்தில், கட்டிடம் முழுவதும் வேகமாக பரவியது, மேலும் கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களே தீ பரவ காரணமாக இருக்கலாம் என ஸ்பெயின் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
நேற்று பிற்பகல் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 30 times, 1 visits today)