பாகிஸ்தானில் 4.4 ரிக்டரளவில் பதிவான நிலநடுக்கம்
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத், ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது.
ராவல்பிண்டியை மையமாக கொண்டு 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
(Visited 27 times, 1 visits today)





