மியன்மாரில் 4.4 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம்

மியன்மாரில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் இன்று (17) காலை 9.25 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் இந் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளது.
சேதம் மற்றும் பாதிப்பு தரைமட்டத்தில் இருந்து சுமார் 47 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
நிலநடுக்கத்தாலான சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் திகதி 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானமை குறிப்பிடத்தக்கது.
(Visited 13 times, 1 visits today)