செய்தி

3வது போட்டி மழையால் ரத்து – ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடியது.

முதலில் நடந்த T20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் இலங்கை 2-0 என கைப்பற்றி இருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணி 21 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் வில் யங் அரை சதம் கடந்து 56 ரன்னும், ஹென்ரி நிகோலஸ் 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை 2-0 என கைப்பற்றியது.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி