இந்தியா செய்தி

உத்தரப்பிரதேசத்தில் 4 குழந்தைகளுடன் யமுனை நதியில் குதித்த 38 வயது நபர்

உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் 38 வயது நபர் ஒருவர், மனைவி வேறொரு ஆணுடன் சென்றதால், தனது நான்கு குழந்தைகளுடன் யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அந்த நபர் முதலில் தனது மூன்று பிள்ளைகளை ஆற்றில் வீசிவிட்டு, பின்னர் குழந்தையுடன் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குதிப்பதற்கு முன், அவர் ஒரு வீடியோவைப் பதிவு செய்து தனது சகோதரி குலிஸ்டாவுக்கு அனுப்பி, அதில் அவர் தனது மனைவி குஷ்ணுமா மற்றும் அவரது காதலனைக் குற்றவாளி என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பின்னர் சகோதரி குலிஸ்டா காவல்துறையை அணுகி அவர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

சகோதரியின் உதவியுடன் பாதிக்கப்பட்டவர்கள் 12 வயது மகாக், 5 வயது ஷிஃபா, 3 வயது அமன் மற்றும் 8 மாதக் குழந்தை இனாய்ஷா என அடையாளம் காணப்பபட்டுள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி