தெற்கு பெருவில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 37 பேர் உயிரிழப்பு
பெருவில்(Peru) ஒரு பேருந்து லாரியுடன் மோதி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 37 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 24 பேர் காயமடைந்துள்ளனர் என்று பிராந்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தெற்கு பெருவில் உள்ள அரேக்விபாவில்(Arequipa) நடந்த விபத்து, தென் அமெரிக்க நாட்டில் சமீபத்திய ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விபத்துகளில் ஒன்றாகும்.
லாமோசாஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் பேருந்து, காரவேலி(Caravel) மாகாணத்தில் உள்ள சாலா(Sala) என்ற நகரத்திலிருந்து அரேக்விபாவுக்குச்(Arequipa) 60 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக அரேக்விபாவின் பிராந்திய சுகாதார மேலாளர் வால்டர் ஓபோர்டோ(Walter Oporto) குறிப்பிட்டுள்ளார்.
பெருவில் அதிக வேகம், மோசமான சாலைகள், அறிவிப்பு பலகைகள் இல்லாதது காரணமாக விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
(Visited 3 times, 3 visits today)





