ஆண்டுக்கு 560 பேரழிவுகள் – 37.6 மில்லியன் மக்கள் ஆபத்தில்
காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என தெரியவந்துள்ளது.
இந்த நிலைமை 2030 ஆம் ஆண்டுக்குள் ஏற்படும் என ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாய மேலாண்மை அலுவலகம் (UNODC) விடுத்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆண்டுக்கு சுமார் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 13 ஆம் திகதி சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தைக் கடைப்பிடிக்கிறது.
ஒற்றுமையின் மூலம் மட்டுமே உலகைப் பாதுகாப்பாக மாற்ற முடியும் என்பதே சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினத்தின் கருப்பொருளாகும்.
(Visited 45 times, 1 visits today)





